வீட்டில் இருக்கும் டைல்ஸ் கறைப்படித்து இருக்கிறதா? அப்போ வீடு துடைக்கும்போது இந்தப் பொருட்களை பயன்படுத்துங்க
பொதுவாக வீட்டை சுத்தமாக வைத்திருக்க பெண்களின் போராட்டம் தான். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை சரி வீட்டை சுத்தம் செய்தாக வேண்டும்.
அப்படி வீட்டு விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பெண்களுக்கு கறைப்படித்து இருக்கும் தரையை சுத்தம் செய்வது மிகப் பெரிய டாஸ்க் தான்.
அப்படி நீங்கள் வசிக்கும் வீட்டில் கிருமிகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய வீட்டை துடைக்கும் போத இந்தப் பொருட்களைக் கொண்டு துடைத்தால் கறைகள் நீங்கி, கிருமிகள் இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
கறையை நீக்க
வீட்டில் இருக்கும் கறையை நீக்குவதற்குவதற்கு வெள்ளை வினிகரைப் பயன்படுத்தலாம். வினிகரானது ஒரு இயற்கை கிருமிநாசினி. ஆனால் அதன் வாசனை சிலருக்கு பிடிக்காத காரணத்தால் அரை பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை கப் வினிகரை கலந்து வாசணை போக அத்தியாவசிய எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.
பேக்கிங் சோடாவை சமையலுக்கு தவிர வீட்டின் கறைகளை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. அரை கப் பேக்கிங் சோடாவை அரை பக்கட் தண்ணீரில் துடைத்தால் தரை பளபளப்பாகவும் தரை சுத்தமாகவும் இருக்கும்.
திரவ சவக்காரம் அல்லது டிஷ் வாஷ்களை பாத்திரங்களை கழுவுவதற்கு அதிகம் பயன்படுத்துவோம் ஆனால் இவற்றை தரையை துடைப்பதற்கும் பயன்படுத்தலாம். வீட்டைத் துடைக்கும் போது அதில் 2 தேக்கரண்டி டிஷ் வாஷ் மற்றும் வினிகரை சேர்த்து துடைத்தால் தரை பளபளப்பாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |