சிறுநீர் பாதை தொற்றை குணப்படுத்தணுமா? இதை Follow பண்ணுங்க
சிறுநீர் தொற்று என்பது பெண்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு பிரச்சனையாகும். உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு தேவையானவற்றை எடுத்து உடலுக்கு தேவையில்லாதவையை வெளியேற்றும் செயற்பாட்டை இந்த சிறுநீரகம் தான் செய்கிறது.
இந்த செயற்பாட்டை சிறுநீரகம் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் செய்கிறது. உடலில் உள்ள கிருமிகளை வெளியேற்ற கூடிய இந்த பகுதி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இந்த பாதையில் தொற்றுக்கள் ஏற்பட்டால் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும். இந்த பாதிப்பை அலட்சியப்படுத்தினால் சிறுநீரகங்கள் இழக்கும் சந்தர்ப்பமும் வரும்.
மருத்துவர்கள் சிறுநீர் தொற்றுக்கு அன்டிபயோடிக்ஸ் பரிந்துரைக்கின்றனர்.
இந்த மருந்துகள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகின்றன. கடுமையான சிறுநீர்ப்பாதை தொற்று உள்ளவர்களுக்கு அன்டிபயோடிக்ஸ் சிறந்த சிகிச்சை முறையாகும். ஆனால் இந்த தொற்று வராமல் வீட்டிலேயே நாம் தடுத்து நிறுத்தலாம்.
அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும்
நாம்மில் பலரும் தண்ணீர் குடிப்பதை மறந்துவிட்டோம். தண்ணீரானது நம் சிறுநீர் பாதை தொற்றை முற்று முழுதாக இல்லாமல் செய்யும். இதனால் நீர்ச்சத்தை தக்கவைத்து கொள்வது, தொற்றை தடுப்பதுடன், குணப்படுத்தவும் உதவுகிறது.
நிறைய தண்ணீர் குடிக்கும் போது, சிறுநீர் நீர்த்துப்போகிறது. இதனால், நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பீர்கள். இது, தொற்றை ஏற்படுத்தும் அனைத்து பாக்டீரியாக்களையும் வெளியேற்ற உதவும்.
ப்ரோபயாடிக் உணவுகள்
ப்ரோபயாடிக்குகள், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குப்படுத்தும் நுண்ணுயிரிகள் ஆகும். சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும்போது, நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, ஈ.கோலை போன்ற கெட்ட பாக்டீரியாக்கள் பெருகுகின்றன.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
வைட்டமின் சி, நாள்பட்ட நோய்களை தடுத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
சிறுநீர்ப்பாதை தொற்றை பொறுத்தவரை, வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பது, சிறுநீரின் அமிலத்தன்மையை உயர்த்தி, தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |