முடி ரொம்ப உலர்ந்து வெடிச்சு இருக்கா? வளர்ச்சிக்கு இந்த இயற்கை பொருட்கள் மட்டுமே போதும்…!
முடியை சுத்தம் செய்வதை தவிர மூலிகை வைத்தியம் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கூந்தலுக்கு சூடான மூலிகை எண்ணெய் பயன்படுத்துவதை ஒரு பகுதியாக சேர்க்கலாம்.
அந்த வகையில் முடி வளர்ச்சிக்கு உதவும் மூலிகை குறித்து தெரிந்துகொள்வோம்.
க்ரீன் டீ
க்ரீன் டீ கசப்புத்தன்மை கொண்டது. இது கப தோஷத்தை குறைக்க உதவும்.
சூடான க்ரீன் டீ பளபளப்பான மற்றும் துள்ளலான முடிக்கும் கூந்தலை அலசி எடுக்கவும் உதவும். ரோஸ் வாட்டருடன் க்ரீன் டீ தூள் கலந்து ஹேர் பேக் போன்று பயன்படுத்தலாம்.
இது முடி வளர்ச்சியை தூண்டும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகிறது. இந்த ஆராய்ச்சிகள் எலிகள் மீது செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வேப்பிலை
அழகுப்பராமரிப்போடு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது வேப்பிலை. இது கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
இது குளிர்ச்சி, ஆண்டிமைக்ரோப்பியல், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பொடுகை கட்டுப்படுத்த செய்யும். வேப்பிலைகளை நீரில் கொதிக்க வைத்து கூந்தலை அலச செய்யலாம். வேப்பிலையை பொடியாக்கி பேஸ்ட் செய்தும் கூந்தலில் ஹேர் பேக் பயன்படுத்தலாம். இது கூந்தல் வளர்ச்சியில் பாதிப்பை உண்டாக்கும் பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
துளசி இலைகள்
இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்க கூடியவை. காய்ச்சல், சளி, இருமல் காலங்களில் உதவக்கூடிய துளை இலைகள் க்ரீன் டீயோடு கலந்து அந்த நீரை கூந்தலில் அலசி எடுக்கலாம்.
துளசி இலையை பொடியாக்கி உலர்ந்த அல்லது உச்சந்தலையில் எரிச்சல் தரும் போது பயன்படுத்தவும். இதை கற்றாழை ஜெல்லுடன் கலந்து கூந்தலில் பயன்படுத்தினால் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.