வெயிலில் சென்று வந்த களைப்பு அதிகமா? இந்த பர்மா பானம் குடிங்க
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இந்த நேரத்தில் ஏதாவது ஒன்று குடித்தால் தான் உடல் புத்துணர்வை பெறும். இதற்கு பானங்கள் குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த பதவில் நாம் பார்க்க இருப்பது கொஞ்சம் வித்தியாசமான பானமாகும். இது எண்ணூர் பகுதியில் கிடைக்கும் பர்மா பானமான மோலேசா.
இதை வெயில் காலத்தில் குடித்தால் உடல் ஜில்லென்று மாறும். இது தமிழர்களால் உரவாக்கப்டட உணவு என்று கூறப்படுகிறது. இது எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மோலேசா செய்ய தேவையானவை
- பச்சரிசி
- வெல்லம்
- தண்ணீர்
- தேங்காய் பால்
- சப்ஜா விதைகள்
- உப்பு
- பாதாம் பிசின்
செய்முறை
முதலில் அரை கப் பச்சரிசியை தண்ணீரில் நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை வடிகட்டிவிட்டு மிக்ஸியில் கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை கெட்டியாக அரைக்கவும்.
பின்னர் பேனில் அரைத்த பச்சரிசி மாவை போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு போட்டு கொதிக்கவிடவும். இது கொஞ்சம் கொஞ்சமாக ஃபெவிகால் போல் கெட்டியாக மாறும்.
இதன் பின்னர் சூடாக இருக்கும் போதே குளிர்ந்த தண்ணீர் உள்ள பாத்திரத்தில் குழி கரண்டி கொண்டு கொதித்த பச்சரிசி மாவை அழுத்தி முறுக்கு மாவு போல் பிழியவும்.
அப்படி இல்லை என்றால் அச்சுக்குழி வைத்து இடியாப்பம் பிழிவது போல் செய்யவும். அதை வெளியே எடுத்து வைத்து கொள்ளுங்கள். இதையடுத்து ஒரு கப் துருவிய வெல்லத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு வெல்ல பாகு தயாரிக்கவும்.
பின்னர் துருவிய தேங்காய் இரண்டு கப் எடுத்து மிக்ஸ்யில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுக்கவும். இதை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். முன்னதாக தேவையான அளவு பாதாம் பிசினை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
150 மில்லி டம்ளர் அளவில் மோலேசா தயாரிக்க மூன்று ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் பாதாம் பிசின், இரண்டு ஸ்பூன் வெல்ல பாகு, 4 ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி மோலேசா தயாரிக்கவும். இப்போது சுவையான பர்மா பானம் தயார். இது ஜிகிர்தண்டாவை போலவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |