மஞ்சள் நிற பற்களை நொடியில் வெள்ளையாக்க... இத ட்ரை பண்ணுங்க
பெண்களுக்கு பொன்நகையை விட புன்னகையே அழகு சேர்க்கின்றது. இப்படிப்பட்ட புன்னகையை கெடுக்கும் வகையில் சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
இதற்காக எத்தனை டூத் பேஸ்ட்டுகளை மாற்றினாலும் சிலருக்கு பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் படலத்தில் எந்த மாற்றமும் ஏற்படாமல் மிகுந்த வருத்தத்தை அளித்திருக்கும். இதற்கு வீட்டிலேயே எளிமையாக எப்படி டூத் பேஸ்ட் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி?
வாழைப்பழத்தோலில் காணப்படும் கூழ் எடுத்து, அதில் 01 சிட்டிகை உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். தினசரி பாவிக்கும் டூத் பேஸ்ட்டையும் அதில் நன்றாகக் கலக்க வேண்டும். இப்போது நீங்கள் தயார் செய்த பேஸ்ட்டைக் கொண்டு வாரத்திற்கு 3 நாட்கள் 10 தொடக்கம் 15 நிமிடங்கள் பல் துலக்கினால் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறுவதை கண்கூடாக அவதானிக்க முடியும்.
இவ்வாறு தயார் செய்த டூத் பேஸ்ட்டை தொடர்ச்சியாக ஒரு மாதம் வரை பயன்படுத்தினால் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்து முழுமையாக வெண்மையாக மாற்றமடையும் மேலும் பற்சிதைவு மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவற்றிற்கும் இது சிறந்த தீர்வாக அமையும்.பளபளப்பாகவும் இருக்கும்.
வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், மக்னீசியம் இருப்பதால் பற்கள் பளபளப்பாக இருக்கும். அதே நேரத்தில், மஞ்சள் நோய்த்தொற்றைக் குறைப்பதற்கும் பற்களை வெண்மையாக்குவதற்கும் உதவியாக இருக்கும்.மேலும் உப்பு இயற்கை என்டிபயோட்டிக் செயற்பட்டு பற்சிதைவை தடுப்பதுடன் பற்களை வெண்மையாக்கவும் துணைப்புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |