சுளுக்கு பிடியால் அவஷ்தைபடுகிறீர்களா? இது உங்களுக்கான வீட்டு வைத்தியம்!
மனிதனுடைய தசைகள் ஏதோவொரு வகையில் விரிவடையும். அவ்வாறு விரிவடையும் போது தசைகளில் சுளுக்கு ஏற்படுகிறது. இந்த சுளுக்கு தசைகளில் மட்டுமன்றி எலும்புகளிலும், திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேற்படி சுளுக்கானது நமது கை, காலை எங்காவது தேவையில்லாமல் அசைக்கும் போது, திரும்பிப் படுக்கும் போது, காயங்கள் ஏற்படும் போது மற்றும் கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உடலில் குறைபாடு ஏற்படும் போது ஏற்படுகிறது.
இப்படியான சுளுக்குகளை நாம் வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தி வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
கற்றாழை ஜெல்
சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தசைப்பிடிப்பு நீங்கும்.
தசை பிடிப்புக்கு ஆயுர்வேதத்தில் முக்கிய மருந்துகளில் கற்றாழையும் சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கிராம்பு எண்ணெய்
சுளுக்கு ஏற்பட்ட தசையின் மீது கிராம்பு எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்து வந்தால் சுளுக்குப் பிடித்த இடத்திலுள்ள வலி குறையும்.
இதனை ஒரு நாளைக்குத் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு தடவைகள் பயன்படுத்தினால் விரைவில் சுளுக்கு சரியாக வாய்ப்புகள் அதிகம்.
வெங்காயம்
வெங்காயம் தசைகளில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும். குறிப்பாக, கணுக்கால் மற்றும் பாதங்களில் எற்படும் சுளுக்கு நடக்க முடியாமல் இருக்கும் பொழுது அதற்கு வெங்காயம் பயன்படுத்தப்படும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு சுத்தமான துணியில் வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அந்த வெங்காயத்தின் சாறு பாதிக்கப்பட்ட இடத்தில் படுமாறு வைத்திருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை செய்யலாம். இப்படி செய்வதனால் வலி குறைந்து சுளுக்கு பிடி நீங்கும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயில் சுளுக்கு போன்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.
ஆலிவ் ஆயிலில் ஆன்டி- இக்ப்ளமேட்டரி பண்புகள் அதிக அளவில் இருக்கின்றமையினால் உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும்.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெயை மிதமான சூட்டில் தேய்த்து நன்கு மசாஜ் செய்தால் வலி உடனடியாகக் குறையும்
கடல் உப்பு
கடல் உப்பு தசை வலி மற்றும் தசை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கடல் உப்பில் உள்ள அதிக அளவிலான மக்னீசியம் தசை வலி மற்றும் சுளுக்கு போன்றவற்றைச் சரிசெய்யும் தன்மையை கொண்டது.
இதனை குளிக்கும் நீரில் போட்டு குளிக்க வேண்டும் மற்றும் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் வைத்து சுத்தமான துணியினால் பாதிக்கப்பட்ட இடத்தில் நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் வலி குறையும்.