வரலாற்றில் மெய்சிலிர்க்க வைக்கும் மரண தண்டனைகள்: இப்படியும் ஒரு தண்டனையா?
நாம் இப்போது வாழும் வாழ்க்கைக்கும் முற்காலத்தில் மனிதர்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்த விதத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இப்போது மனிதர்கள் குற்றங்கள் செய்தால் நிதிமன்றம் தண்டனை கொடுக்கும் அதுவும் கடுமையான தண்டனையாக இருக்காது.
ஆனால் மக்கள் முற்காலத்தில் வாழ்ந்தபோது மனிதர்கள் ஏதாவது குற்றம் செய்தால் அவர்களுக்கு மெய்சிலிர்க்கும்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறுபவர்கள், மதவெறியர்கள், சூனியக்காரர்கள், கிளர்ச்சியாளர்கள் அல்லது அரசியல்ரீதியான எதிரிகள் மரணத்தை மட்டுமல்ல, விவரிக்க முடியாத துன்பத்தையும் எதிர்கொண்டனர்.
இந்த பதிவில் மனிதக்குலத்தின் கடுமையான தண்டனை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வரலாற்று மரண தண்டனைகள்
லிங் சி | இந்த மரண தண்டனைக்கு "மெதுவாக வெட்டுதல்" அல்லது "ஆயிரம் வெட்டுக்களால் மரணம்" எனப்படும். 900 முதல் 1905 இல் வரை நடைமுறையில் இருந்தது. இந்த தண்டனை வியட்நாம் மற்றும் கொரியாவில் பயன்படுத்தப்பட்டது. இந்த தண்டனை நபரை ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு, தோல் மற்றும் கைகால்கள் படிப்படியாக சின்ன சின்ன துண்டுகளாக வெட்டப்பட்டன. இறுதி வெட்டு பொதுவாக இதயத்தில் அல்லது தலையை வெட்டுவதுடன் தண்டனை முடிவடையும். |
பிரேசன் புல் | பிரேசன் புல் என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டில் சிசிலியின் கொடுங்கோல் அரசர் பலாரிஸ் பயன்படுத்திய மரண தண்டனையாகும். ஒரு காளை போன்ற வடிவிலான ஒரு காலியான வெண்கல சிலையாகும், அதில் தண்டனைக்குரிய நபரை உள்ளெ வைப்பார்கள். பின்னர் உள்ளே வைக்கப்பட்டவுடன், கீழே நெருப்பு மூட்டப்பட்டு, அந்த நபரை உயிருடன் க்ரில் சிக்கன் போல வறுப்பாாகள். இதில் இருந்து நபர் அலறினால் அது காளை அலறல் போல கேட்கும். |
இரத்தக் கழுகு | இரத்தக் கழுகு என்பது நார்ஸ் புராணத்தில் வேரூன்றிய ஒரு கொடூரமான மரணதண்டனை முறையாகும். இந்த தண்டனை முதுகு வெட்டப்பட்டு விலா எலும்புகளை வெளியே எடுத்து இது றெக்கைகள் போல வளைக்கப்படும். வேதனையை அதிகரிக்க காயங்களில் உப்பு தேய்க்கப்பட்டதாகவும், நுரையீரல் வெளியே இழுக்கப்பட்டு நீட்டிய விலா எலும்புகளின் மீது குத்தபடும் என கூறப்படுகின்றது. இது பயங்கரமான கழுகு பொல காட்சியளிக்கும். |
The Rack | இந்த ரேக் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து லண்டன் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சித்திரவதை தண்டனையாகும். இதில் தண்டனைக்குரியவரின் கைகால்களை கயிறுகளால் இழுத்து நீட்ட வடிவமைத்தனர். இதன் பின்னர் குறிப்பிட்ட நபர் நடக்க முடியாத சூழ்நிலையில், அவர் கழுமரத்தில் தூக்கிச் செல்லப்பட்டு உயிருடன் எரிக்கப்படுவார்கள். இதில் இந்த தண்டனைக்கு ஆளான ஒருவர் புராட்டஸ்டன்ட் போதகர் ஆன் அஸ்க்யூ ஆவார், அவர் சக அனுதாபிகளின் பெயரைக் கூற மறுத்ததற்காக 1546 இல் சித்திரவதை செய்யப்பட்டார். |
கொதிக்க வைத்தல் | இந்த தண்டனை முறையில் ஆடைகளை அகற்றி கொதிக்கும் நீர், எண்ணெய் அல்லது தார் தொட்டிகளில் போட்டு கொதிக்க வைப்பார்கள். இந்த தண்டனை முறை கிழக்கு ஆசியாவிலிருந்து இங்கிலாந்து வரை பரவலாக காணப்பட்டது. |
எலி சித்திரவதை | பசியால் வாடிய அல்லது நோயுற்ற எலிகள், தண்டனை அளிக்கப்பட்டவரின் வெறும் வயிறு அல்லது மார்பில் வைக்கப்பட்ட ஒரு கொள்கலனில் வைக்கப்படும். பின் கொள்கலன் வெளியில் இருந்து சூடேற்றப்படும், வெறித்தனமான எலி தப்பிக்க ஒரே வழி, பாதிக்கப்பட்டவரின் சதை வழியாக உயிர் தப்பிக்க துளைக்கும். பின்னர் உடலில் உள்ள முழு உறுப்புக்களையும் உள்ளெ கிறித்தெறிந்து வெளியெ தப்பிக்கும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |