கைதான ஷாருக்கானின் மகனுக்கு ஹிர்திக் ரோஷன் கூறிய அறிவுரை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் சிக்கியதால் கைதாகியுள்ள நிலையில், அவருக்கு நடிகர் ஹிர்த்திக் ரோஷன், இன்ஸ்டாகிராமில் ஆறுதலாக ஒரு கடிதம் வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில், என் அன்பான ஆரியன், வாழ்க்கை ஒரு விசித்திரமான பயணம். ஏனென்றால் அது நிச்சயமற்றது. அது உனக்கு பல அனுபவங்களை கொடுக்கிறது. ஆனால் கடவுள் மிகவும் அன்பானவர், வாழ்க்கையில் முன்னேரி வர அவர் கடினமான விஷயங்களை மட்டுமே கொடுக்கிறார்.
மேலும், மிகப்பெரிய குழப்பங்களுக்கு மத்தியில் தான் நாம் அனைத்திற்கும் தயார் ஆகிவிட்டோமோ என்பது நமக்கு புரியும். அப்படி பட்ட சூழ்நிலை தற்போது உனக்கு வந்துள்ளது. கோபம், குழப்பம், உதவ ஆளில்லாத நிலையில் தான் உனக்குள் இருக்கும் ஹீரோ வெளியில் வருவான்.
இது போன்ற கடினமான காலங்கள் தான் உன்னை வலிமையாக்கும். இந்த காலம் உன்னுள் இருக்கும் கருணை, அன்பு போன்றவற்றை அழித்துவிடும். அப்படி நடக்கவிடாமல் தடுத்துக்கொள். நான் உன்னை குழந்தையாவே பார்க்கிறேன்.
நான் உன்னுடன் இருக்கிறேன், தைரியாக இரு என கூறியுள்ளார். இதனிடையே போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆர்யன் கானுக்கு ஹிரித்திக் ரோஷன் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 3 நாள் காவல் முடிந்த நிலையில் மும்பை நீதிமன்றத்தில் ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆஜர்படுத்தியுள்ளனர்.