பெண்ணுக்கு திடீரென்று முளைத்த மூன்றாவது மார்பகம்! பேரதிர்ச்சியில் மருத்துவர்கள் - குழந்தை பிறந்த பிறகு நடந்த அதிசயம்
போர்ச்சுகல் நாட்டில் குழந்தை பெற்ற பெண்ணிற்கு கை அக்குளில் மூன்றாவது மார்பகம் திடீரென முளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சகல் நாட்டில் உள்ள லிஸ்பான் நகரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
பெண் குழந்தை பிறந்த இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு வலது கை அக்குள் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டு வீக்கம் வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் அந்த வீக்கத்தை அழுத்தி பார்த்த போது அதிலிருந்து அவருக்கு தாய் பால் வந்துள்ளது. உடனடியாக டாக்டரை அழைத்து என்னவென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அவரை சோதனை செய்த டாக்டர்கள் அது மிக அரிய வகை பிரச்சனையாக பார்த்தனர். இது குறித்து டாக்டர்கள் கூறும்போது: "பெண்களுக் இரண்டு மார்பகங்களுக்கு மேல் மார்பகம் வருவது பாலிமாஸ்டிய என அழைக்கப்படும்.
பெரும்பாலும் இது ஒரு மார்பகத்தின் பகுதியிலேயோ அல்லது அருகிலேயோ தான் வரும் அக்குள் பகுதியில் வருவது அபூர்வம் என கூறினர். இது மார்பக தசை வளர்ச்சி மாறுபாடு காரணமாக ஏற்படுகிறது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.