மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை: தலைமுடி வெட்டும் நேரத்தில் கண்ணீர் விட்டு கதறிய தாய்
மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நடிகை ஹினா கான் தன்னுடைய தலைமுடியை வெட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஹினா கான்
தமிழ் சினிமா போல் பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகை தான் ஹினா கான்.
இவர் தற்போது மார்ப்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.
ஹினா கான் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக இருந்து வருகின்றது.
கதறி அழும் தாய்
அந்த வகையில் சிகிச்சைக்காக தன்னுடைய நீண்ட கூந்தலை கட்டையாக வெட்டிக் கொள்கிறார்.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளியை பகிர்ந்துள்ளார். வீடியோவில், ஹினா கானின் முடி வெட்டப்படும் போது அவரது தாய் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் குமுறி அழும் சத்தம் கேட்கிறது.
இதனை பார்த்த ஹினா கான் இது வெறும் முடி தான் என்று கூறி ஆறுதல்படுத்துகிறார்.
மேலும், "போதும்... இப்படி அழுவது உங்கள் உடலுக்கு நல்லதில்லை" என்று சொல்லும் காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு "நான் நன்றாக இருக்கிறேன் என்று அனைவருக்கும் உறுதியாகக் கூற விரும்புகிறேன். நான் வலிமையாகவும், உறுதியாகவும், இந்த நோயைக் கடக்க முழுமையாகத் தயாராக இருக்கிறேன். சிகிச்சை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதிலிருந்து விடுபட்டு இன்னும் வலுவாக வருவேன்" என அவர் தன்னம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த இணையவாசிகள் தாயாருக்கும் நடிகைக்கும் ஆறுதல் கூறும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |