பிரபல பாடகர் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றினாரா? திருமணப் பெண் செய்த மோசமான காரியம்!
இமாச்சல பிரதேசத்தில் 19 வயது பெண் வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு பிரபல பாடகர் பெயரை சொல்லி ஓடிப்போன சம்பவம் நடந்துள்ளது.
இமாச்சல பிரதேசம் ஹாமிர்பூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பிரபலமான பாடகரான குரு ரான்தாவ்வா என்பவரின் ரசிகையாக இருந்துள்ளார்.
இவருக்கு இவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு 15 நாட்களே உள்ள நிலையில் இந்த பெண் தன் வீட்டிலிருந்த நகை, பணம் எல்லாற்றையும் எடுத்து விட்டு வீட்டில் "நான் வீட்டை விட்டு செல்கிறேன்" என கடிதம் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
அவர் எழுதி வைத்தகடிதத்தை படித்த அவரது பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வந்து விசாரணை நடத்திய போது அந்த பெண்ணின் கல்லூரி நோட்டில் உள்ள கையெழுத்தும், தான் வீட்டை விட்டு செல்வதாக எழுதி வைத்த கையெழுத்தும் ஒன்றாக தான் இருந்துள்ளது.
தன் மகள் காணாமல் போது குறித்து தந்தை போலீசாரிடம் சொல்லும் போது தனது மகள் பிரபலமான பாடகர் குரு ரான்தாவ்வா வின் மிகப்பெரிய ரசிகை, குரு ரான்தாவ்வா என்ன ட்வீட் செய்தாலும் தன் மகள் அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்வார் என்றும்,
ட்விட்டரில் தனது மகளை ஒருவர் குரு ரான்தாவ்வாவின் நண்பர் என்ற அறிமுகத்தில் பழகி வந்ததாகவும், அவர் தான் தன் மகளை கடத்தி சென்றிருக்கலாம் எனவும், அவன் தான் தன் மகளை நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண் வீட்டிலிருந்து ரூ50 ஆயிரம் பணமும் ஏராளமான நகைகளையும் எடுத்து சென்றுள்ளது குறிப்பிட்டத்தக்கது.