கமலை பின்னுக்கு தள்ளிய விஜய்... சினிமாவில் அதிக சம்பளம் பெறும் டாப் 5 நடிகர்கள் யார் தெரியுமா?
தென்னிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, பிரபாஸ், விஜய், கமல், அல்லு அர்ஜுன் போன்றோர் பல கோடிகளில் சம்பளம் பெற்று வருகிறார்கள். அப்படி சம்பளம் பெற்று டாப் 5 நடிகர்கள் யார் யார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரஜினிகாந்த்
அதிக சம்பளம் பெறும் பட்டியலில் முதலாவதாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் தான். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் தன் நடிப்பாலும், ஸ்டைலாலும் பலரையும் ஈர்த்தவர். இவர் இறுதியாக ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாக சாதனைப்படைத்தது. அந்தவகையில் இவர் ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று முதலாவதாக இருக்கிறார்.
பிரபாஸ்
இரண்டாவதாக பாகுபலி திரைப்படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என பல மக்களிடம் பிரபலமான பிரபாஸ். இவரின் சஹோ, ஆதி புருஷ், சலார் போன்ற திரைப்படங்கள் பலகோடிகளில் உருவாகியிருந்தது. இவரும் தான் நடிக்கும் ஒரு படத்திற்கு 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.
விஜய்
மூன்றாவது இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் இவர் ஆரம்பத்தில் குறைவான சம்பளம் பெற்றவர். போக போகத் தான் தன் சம்பளத்தை உயர்த்தி கிட்டத்தட்ட 130 கோடிக்கு சம்பளம் பெற்று வருகிறார். மேலும், தற்போது நடிக்கவுள்ள தளபதி 68 திரைப்படத்திற்கு அதற்கும் அதிகமான சம்பளம் வாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கமல்ஹாசன்
நான்காவது இடத்தில் உலகநாயகனாக கொண்டாடப்படும் கமல்ஹாசன் தான். அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் பாலிவுட், டொலிவுட் என கலக்கியவர். இவர் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்னும் பேசப்பட்டு வருகின்றது. தற்போது இவர் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரும் தற்போது சம்பளத்தை உயர்த்தி 150 கோடியிலிருந்து 120 கோடி வரைக்கும் சம்பளம் வாங்குகிறார்.
அல்லு அர்ஜுன்
தெலுங்கு சினிமாவில் அதிக ரசிகர்களுடன் கொடிகட்டி பறக்கும் நடிகர் தான் அல்லு அர்ஜுன். இவர் நடித்த பல திரைப்படங்கள் தோல்விக்குள் போகாமல் நிறைய திரைப்படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. இவர் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்காக 125 கோடி ரூபா சம்பளம் பெறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |