இந்தியாவுல இறக்குமதி வரி அதிகமாக இருக்கு.. பிரபல யூடியூபரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில்!
பிரபல தமிழ் யூடியூபர் மதன் கெளரி என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், டெஸ்லா கார்களை இந்தியாவில் விரைவில் தொடங்குமாறு எலன் மஸ்க் அவர்களை டெக் செய்து பதிவிட்டு இருந்தார்.
அதற்கு எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில் அளிக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையில், டீசல் விலை ரூ.100ஐ நெருங்கி வருகிறது. இதனால் பைக், கார் வைத்திருப்பவர்கள் பட்ஜெட் இடிக்கத் தொடங்கிவிட்டது. அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து தற்போது சைக்கிள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், வசதி படைத்தவர்களும், வசதி இல்லாதவர்களும். மத்திய அரசை மறைமுறைகமாக விமர்சிக்கும் வகையில் பிரபலங்கள் பலர் சைக்கிளுக்கு மாறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.
இதனால், சைக்கிளை போல் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அதன் விலையோ விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச வரி விதிப்பு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், உலகின் பிரபல எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவை இந்தியாவில் விரைவாக அறிமுகம் செய்யுமாறு ட்விட்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யூ- டியூபர் மதன் கெளரி ட்விட்டை பதிவிட,. இதற்கு டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் பதில் அளித்து வியக்கவைத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, உலகில் உள்ள பெரிய நாடுகளிலேயே மிக அதிகமாக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா. எலெக்ட்ரிக் வாகனங்களை பெட்ரோல் டீசல் வாகனங்களை போல் இந்தியா கையாள்வதால் டெஸ்லாவை கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் காலநிலை இலக்குகளுடன் ஒத்துப் போவதில் டெஸ்லா நிறுவனத்திற்கு சிக்கல் இருப்பதாக கூறியுள்ளார்.
எனினும், மின்சார வாகனங்களுக்கு குறைந்தபட்சம் தற்காலிக கட்டண நிவாரணம் கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இப்படி பதில்கள் வருவது முதல் முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் டெஸ்லா கார் தொடர்பான கேள்விகள் எழுப்பப்படும் போது எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பதில்கள் வந்துள்ளன.
Dear @elonmusk please launch Tesla cars in India ASAP! ? pic.twitter.com/ohFieRzdGW
— Madan Gowri (@madan3) July 23, 2021