புலியின் நாக்கில் ஒளிந்திருக்கும் இந்த ரகசியம் தெரியுமா?
புலிகள் பெரும்பாலும் மிக அழகான மற்றும் மூர்க்கமான விலங்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. காட்டு விலங்குகளிலே சிங்கத்திற்கு அடுத்தபடியாக வலிமை மிக்க விலங்காக பார்க்கப்படுவது புலி தான்.
சுவாரஸ்யமான பல்வேறு பழக்கங்களை கொண்டுள்ள புலிகளின் சுபாவம் பற்றி பெரும்பாலான மனிதர்களுக்கு தெரியாத பல விடயங்கள் பல இருக்கின்றன.

என்னதான் சிங்கம் காட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் சிங்கத்தை விட புலிகள் பல தனித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக சிங்கத்தின் நாக்கை விட புலியின் நாக்கு மிகவும் வலிமை வாய்ந்த்தாக அறியப்படுகின்றது. புலி உங்களை வெறுமனே நாக்கால் நக்கினால் கூட உங்கள் தோலே உரிந்து வந்துவிடும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?

புலியின் நாக்கில் இவ்வளவு வலிமையா?
ஆம், புலிகள் ஒரு இரையை வேட்டையாடும் போது அதன் தோலை உரிக்க கடிக்க வேண்டிய அவசியமே கிடையாது நாக்கை பயன்படுத்தி நக்கினாலே போதும் இரையின் தோல் தனியாக உரிந்துவிடும்.
ஏனெனில் அதன் நாக்கில் முட்கள் போன்ற கூர்மையான ஆயிரம் கணக்கான அமைப்புகள் (Papillae) உள்ளன, அவை வேட்டையாடும்போது இரையின் தோலை உரித்து, தசைகளை சுரண்டி எடுக்க உதவுகின்றன.

புலியின் நாக்கு கிட்டத்தட்ட ஒரு சீப்பின் அமைப்பைப் போன்று இருக்கும். அது வேட்டையாடிய இரையை எளிதில் உண்பதற்கு மாத்திரமன்றி, அதன் உடம்பில் இருக்கக்கூடிய ரோமங்களில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குவதற்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
புலியின் நாக்கை போன்று புலியின் உமிழ் நீரும் கூட மிகவும் தனித்துவமான தன்மையை கொண்டிருக்கின்றது புலியின் உமிழ்நீர் இயற்கையாகவே அதிக மருத்துவ குணம் கொண்டது. தன் உடலில் ஏற்படும் காயங்களை தன் நாக்கினால் நக்கியே புலி குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றலை கொண்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |