M.S. Dhoni பட காட்சியை ரீகிரியேட் செய்த Hi Nanna பட புகழ் கியாரா கன்னா! குவியும் லைக்குகள்
M.S. Dhoni The Untold Story திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சியொன்றை அச்சு அசல் அப்பயே ரீகிரியேட் செய்த குழந்தை நட்சத்திரம் கியாரா கன்னாவின் செம கியூட் காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் M.S. Dhoni The Untold Story.
இந்த திரைப்படத்தில் கேப்டன் மஹேந்திர சிங் தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்க வில்லை, மாறாக வாழ்ந்திருக்கிறார் என்றால் மிகையாகாது.
தோனியின் காதல் மனைவி ஷாக் ஷி யாக பிரபல நடிகை கியாரா அத்வானி , நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பிரபல காட்சியொன்றை அச்சு அசல் அப்படியே ரீகிரியேட் செய்து கியாரா கன்னா வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
குறித்த சிறுமி நானி மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான Hi Nanna திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |