Viral Video: வேட்டையாடிய மீனை சாப்பிடுவதற்கு இவ்வளவு யோசனையா? நாரையின் அசத்தல் காட்சி
நாரை ஒன்று பெரிய மீனை வேட்டையாடிச் செல்லும் காட்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாரையின் மீன் வேட்டை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.
பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும்.
அந்த வகையில் இங்கு heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று தனது பசிக்காக மீன் ஒன்றினை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீனை வேட்டையாடிய பின்பு அதனை மிகவும் லாவகமாக தனது வாயில் வைத்துக் கொண்டு சாப்பிடுவதற்கு தயார் ஆகின்றது.
நாரையின் இந்த ரியாக்ஷனானது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், மீண்டும் மீண்டும் இக்காட்சியினை அவதானிக்க வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |