புரதச்சத்தை அள்ளித்தரும் பாசிப்பருப்பு அல்வா: செய்வது சுலபமே
பொதுவாக பண்டிகை காலம் என்றாலே இனிப்பு பண்டம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் பாசிப்பயறு வைத்து நாவில் கரையும் அல்வா செய்வது எப்படி ? என்பதை இந்த வீடியோவில் பார்கலாம்.
பாசிப்பருப்பில் அதிகளவில் புரதச்சத்து காணப்படுகின்றது. இனிப்பு என்பது குழந்தைகளின் பிரியம் என்பதால் பாசிப்பருப்பு அல்வாவை அவர்களுக்கு செய்து கொடுக்கலாம். இது அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்தை வழங்கும்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
- பாசிப்பருப்பு -அரைக்கப்
- தண்ணீர் - 1 1/2ககப்
- வெல்லம் - 1 1/2கப்
- நெய் - 8 தேக்கரண்டி
- முந்திரிப்பருப்பு -20 கிராம்
- ரவை - கால் கப்
- துருவிய தேங்காய் - கால் கப்
- ஏலக்காய் தூள் - 2 தேக்கரண்டி
செய்யும் முறை
தோல் நீக்கிய பாசிப்பருப்பை 2 நிமிடங்கள் வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதை ஒருபாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருப்பு நன்றாக வேகும் வரை அவிக்க வேண்டும்.
வேக வைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து அரைக்கப் தண்ணீரை ஊற்றி வெல்லப்பாகு தயாரித்து எடுத்து கொள்ளவும்.
இன்னும் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து முந்திரி பருப்பை வறுத்து எடுத்து கொள்ளவும்.
அதே நெய்யில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து ரவையை வறுக்க வேண்டும். அதனுடன் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
ரவையும், தேங்காயும் நன்றாக வறுபட்டு வந்தவுடன் வேகவைத்து எடுத்து வைத்த பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும்.
பின்னர் இதனுடன் தயார் செய்த வெல்லப்பாகை சேர்த்து கொள்ள வேண்டும். இது நன்றாக கெட்டியாகும் வரை சேர்த்து கொண்டே இருக்க வேண்டும்.
பின்னர் முந்திரிபருப்பை சேர்த்து அதனுடன் வாசனைக்காக கொஞ்சமாக ஏலக்காய் தூளை சேர்த்து கடைசியில் நெய் சேர்த்து கிண்டி எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.