நம் வீட்டின் அருகே நோய்களை தீர்க்கும் மூலிகைகள்! ஓர் பார்வை
சில நேரங்களில் பல நல்ல விடயங்கள் நம் கண்முன்னே இருந்தாலும் அதை நாம் கண்டுகொள்ளத் தவறவிடுகின்றோம்.
அவ்வாறான பல நல்ல விடயங்களில் மூலிகைகளையும் கூறலாம்.
மூலிகைகள் என்பது பல நன்மைகளை நமக்குக் கொடுக்கக் கூடியது. இருப்பினும் அதற்கான முக்கியத்துவத்தை பலரும் அறிந்து கொள்ள முனைப்பு காட்டுவதில்லை.
சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடுகின்றோம். ஆனால், நம்மைச் சுற்றி இருக்கும் பொருட்களே நமக்கு வரும் சின்னச் சின்ன நோய்களை குணமாக்கவல்லது.
அவ்வாறான சில மூலிகைகள் பற்றி பார்ப்போம்
பாகற்காய்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
பாகற்காய் சாறு அருந்துவது மிகவும் நன்மையளிக்கும்.
குடல்வாழ் புழுக்களை அழிக்கும்.
செம்பருத்திப் பூ
வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வயற்றுவலி போன்றவற்றுக்கு இதில் கஷாயம் செய்து குடித்தால் நல்லது.
இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்ததொரு மூலிகையாகும்.
நிலவேம்பு
நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் தீராத காய்ச்சல் தீரும்.
இதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.
ஆடாதோடை
இருமலுக்கு சிறந்ததொரு நிவாரணியாக அமையும்.
இதன் இலைகளை பொடி செய்து பாலில் சேர்த்து அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
பொன்னாங்கண்ணி
இந்தக் கீரையை சாப்பிட்டு வந்தால் கண் பார்வை கூர்மையாகும்.
கற்பூரவள்ளி
இதன் தண்டு, இலைச் சாற்றை குடித்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும்.
துளசி
துளசி இலைகளை மென்று விழுங்கினால், பசி அதிகரிப்பதோடு ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
இதன் சாறு சளியை குணமடையச் செய்யும்.