வெள்ளை முடிக்கு டை தேவையில்லை...மருதாணி இலையுடன் இதை ஒரு ஸ்பூன் சேர்த்தா போதும்
இன்றைய நவீன காலத்தில், வெள்ளை முடி என்பது ஒரு சாதாரண பிரச்சனையாகிவிட்டது.
இதைச் சமாளிக்க, மக்கள் பெரும்பாலும் விலையுயர்ந்த சிகிச்சைகள், முடி நிறம் மற்றும் ரசாயனப் பொருட்களை நாடுகிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சனையை இயற்கையான வழியிலும் தீர்க்க முடியும்.
இந்த பொருட்கள் மூலம் நமது தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதுடன் வளர்ச்சியும் அதிகமாகும். அந்த வகையில் இப்போது இயற்கையில் இருக்கும் மருதாணியுடன் சில பொருளை சேர்த்தால் முடி மிகவும் கருகரு என்று மாறும்.
நரை முடி கருப்பாக்க
இரசாயன ஹேர் டையில் பாரா-ஃபீனிலெனெடியமைன் (PPD) போன்ற இரசாயனங்கள் உள்ளன. இது சிலருக்கு தோல் அரிப்பு, சிவத்தல், வீக்கம், மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தலாம்.
மருதாணியில் சிவக்கும் தன்மை உள்ளது. இதனுடன் டீதூள் கொஞ்சம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இது ஒரு கிளாஸை மக்கால் கிளாஸாக கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்க வெண்டும். பின்னர் இந்த அரைத்த கலவையில் திரிபெல்லா பொடியை கலந்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
அடுத்த நாள் காலை அரிசி வடித்த கஞ்சியை இத்துடன் சேர்த்து லேசாக சூடுபடுத்த வேண்டும். அவ்வளவு தான் இந்த ஹேர் பெக்கை தலைக்கு தேய்த்து 10 நிமிடம் கழித்து குளித்தால் கருகருவென்ற முடியை நீங்கள் பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
