கோழியை 'VIP' ஆக்கிய குழந்தை! ஷு போட்டு அசத்திய காட்சி
கோழி ஒன்றிற்கு சிறுமி ஒருவர் ஷு அணிந்து அழகு பார்க்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கோழிக்கு ஷு அணிந்த சிறுமி
பொதுவாக சிறு குழந்தைகளின் செயல்பாடு சற்று வித்தியாசமாகவும், மற்றவர்கள் ரசிக்கும் வகையில் தான் இருக்கும். மேலும் சிறு குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு பஞ்சமும், கவலைக்கு இடமும் இருக்காது.
அந்த வகையில் இங்கு ஒரு காணொளியினை தான் நாம் காணப்போகின்றோம். அதாவது வீட்டில் வளர்க்கப்படும் கோழி ஒன்றிற்கு சிறுமி ஒருவர் ஷு அணிந்து அழகு பார்க்கின்றார்.

பொதுவாக கோழிகள் ஒரு இடத்தில் அமைதியாக நிற்பது கிடையாது. ஆனால் குறித்த காணொளியில் கோழியும் சிலை போன்று நின்று சிறுமிக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
ஒருவழியாக ஷு அணிந்துவிட்ட பின்பு கோழியும் அசத்தலாக கேமராவிற்கு போஸ் கொடுத்துள்ளது. இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |