போதை பொருளுடன் கையும் களவுமாக சிக்கிய பிரபல நடிகை: கைது செய்த பொலிசார்
பிரபல நடிகை ஹீனா பன்சால் போதை பொருளுடன் பொலிசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
நடிகர், நடிகைகள் மது பார்ட்டிகள் கொண்டாடுவது தற்போது மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி திருமணம் ஆகாமல் தனது பிடித்தவர்களுடன் சேர்ந்து வாழவும் செய்கின்றனர்.
தற்போது பார்ட்டி என்றால் மது மட்டுமின்றி தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதை நடிகர், நடிகைகள் அதிகமாக செய்து வருகின்றனர்.
அவ்வாறு சமீபத்தில் இரவு நேரத்தில் பங்களாவில் ரகசியமாக போதைப்பொருட்கள் உட்கொண்டு பார்ட்டி கொண்டாடிய பிரபல நடிகை ஹீனா பன்சால் பொலிசாரிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
தமிழில் 2015ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான யாகவராயினும் நாகாக்க என்ற படத்தில் நடித்தவர் ஹீனா பன்சால். ஹிந்தி ஹீரோயினான இவர் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தால் மட்டும் தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகின்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
