ஆரோக்கத்தை கொடுக்கும் பால் நஞ்சாகுமா? அதிகம் பருகாதீங்க ஆபத்தாம்
அதிகமான ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்ட பால் அதிகமாக நாம் எடுத்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அவ்வாறு நாம் அன்றாடம் பால் அதிகமாக எடுத்துக்கொண்டால் என்னென்ன பிரச்சினை ஏற்படும் என்பதை அறிந்து கொள்வோம்.
அதிகமாக பால் எடுத்துக்கொண்டால் என்னவாகும்?
பாலில் கால்சியம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், கலோரிகள் உள்ள நிலையில், நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்பு பிரச்சினையும் ஏற்படுகின்றது.
எளிதில் ஜீரணம் ஆகாமல் செரிமான பிரச்சினையை ஏற்படுத்துவதோடு, காபி, டீ போன்று குடிக்கும் போது அதிகம் சர்க்கரை கலந்து கொண்டு குடிப்பதால் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், உடலில் சேரும் சத்துக்களின் அளவும் குறையுமாம்.
பால் அதிகம் குடிப்பதால் கொழுப்புகள் உடலில் அதிகம் சேர்ந்து இதய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நாள் ஒன்றிற்கு மூன்று முறைக்குள் பால் குடிப்பது உடலுக்கு நலன் பயக்கும்.