குழந்தைக்கு கருவில் இருக்கும் போதே இதய சிகிச்சை: சாதனை செய்த வைத்தியர்கள்!
மருத்துவமனையொன்றில் கருவில் இருந்த குழந்தைக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்த சம்பவம் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
அதெப்படி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு சிகிச்சை செய்ய முடியும் என்ற கேள்வி இருந்துக் கொண்டு தான் இருக்கும்.ஆனால் இதனை சாத்தியப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.
கருவில் அறுவை சிகிச்சை
இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கருவில் இருந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு வயிற்றில் தங்காது கலைந்துள்ளது. நான்காவது முறை கர்ப்பம் தரித்த இந்தப் பெண்ணை பரிசோதனை செய்தப்போது பெண்ணின் வயிற்றிற்குள் இருக்கும் குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் அந்தப் பெண் இந்தக் குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அதனால் கருவில் வைத்து சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த செய்தி தொடர்பில் இன்னும் தெளிவான தகவல்களை பெற்றுக் கொள்ள கீழுள்ள காணொளியை காணுங்கள்.