இவங்க மறந்து கூட காபி குடிக்காதீங்க.. விளைவு மோசமாக இருக்கும்
பொதுவாக காலையில் எழுந்தவுடன் நாம் அனைவரும் காபி அல்லது டீ குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இந்த பழக்கம் காலையில் ஒரு உற்சாகம் கொடுத்தாலும், அதனை நாளடைவில் சில உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
“காபி” என்பது கோப்பி தாவரத்தின் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் பானமாகும். இதில் மூலப்பொருளாக இருக்கும் காஃபின் எனப்படும் பொருள் ஒரு தூண்டுதலாக இருக்கும்.
உலகம் முழுவதும் பரவலாக உள்ள மக்கள் காபி குடிப்பதை பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். என்ன தான் காபி குடிப்பதால் ஏகப்பட்ட பலன்கள் இருந்தாலும், ஒரு சிலர் காபி குடிப்பதால் பிரச்சினைகள் அதிகமாகும்.
அந்த வகையில் யாரெல்லாம் காபி குடித்தால் நோய் நிலைமை மோசமாகும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. இதய பிரச்சினை
அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு ஆகிய பிரச்சினையுள்ளவர்கள் குடிப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். காபியில் உள்ள காஃபி என்ற பொருள் இதய பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.
2. அமில ரிஃப்ளக்ஸ்
சிலருக்கு ஆரோக்கிமற்ற உணவுப்பழக்கங்கள் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை காரணமாக அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சினை அதிகமாகும். இந்த பிரச்சினையுள்ளவர்களுக்கு காபி குடிக்கும் பொழுது அந்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும். வெறும் வயிற்றில் காபி குடித்தால் அது மோசமான விளைவுகளாக மாறும்.
3. கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணிகள் பெண்கள் காபி குடிக்கும் பொழுது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை சிதைவடையும். அதிக எடையுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மருத்துவர்கள் காபி, டீ குடிப்பதை பரிந்துரைப்பது குறைவு.
4. குழந்தைகள், இளைஞர்கள்
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் காபி குடிப்பதை குறைத்து கொள்வது நல்லது. இந்த பழக்கம் தூக்கப்பிரச்சனை, பதட்டம் மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஆகிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
5. தூக்க கோளாறு
தூக்கு கோளாறு அல்லது தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் காபி குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். இது தூக்கத்தை முற்றாக பாதித்து, வேறு விதமான பிரச்சினைகளை உண்டுபண்ணும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |