இதய நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருங்கோழி: இலங்கை பெண்ணின் அட்டகாசமான பதில்
இலங்கையில் இளம்பெண் ஒருவர் கருங்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதுடன், கருங்கோழி குறித்த பல கோள்விகளுக்கு பதிலையும் கொடுத்துள்ளார்.
பொதுவாக இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்படும் கருங்கோழி இனங்கள் கடக்நாத் என்று அழைக்கப்படுகின்றது. இந்த கோழிகள் ஆரோக்கியத்தினை அள்ளித் தருவது மட்டுமின்றி, சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரும் சாப்பிட உகந்ததாகவும் இருக்கின்றது.
இந்த கோழியின் இறைச்சி, முட்டை இவை அனைத்தும் விலை அதிகமாகவே இருக்கின்றது. முக்கியமாக இதய நோய் உள்ளவர்கள் எந்தவொரு பயம் இல்லாமல் இந்த சிக்கனை சாப்பிடலாம்.
இலங்கையில் இந்த கருங்கோழி வளர்ப்பில் கொடிகட்டி பறக்கும் றீட்சா ஆர்கானிக் ஃபார்ம்(ReeCha Organic Farm) என்ற முகநூல் பக்கத்தில் இலங்கை பெண் ஒருவர் நமக்கு எழும் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். மேலும் இந்த கோழியில் இருக்கும் ஆரோக்கியத்தையும் மிகவம் அருமையாக விளக்கியுள்ள காணொளியினை இங்கு காணலாம்.