குளிர்காலத்தில் மாரடைப்பு வர என்ன காரணம்? தடுக்கும் வழிமுறைகள் இதோ
பொதுவாக குளிர்காலம் வந்து விட்டால் வெளியில் இறங்கி நடப்பது கூட பெரிய சவாலாக இருக்கும்.
சாதாரண மனிதர்களை விட இருதய பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனின் குளிர் அதிகரிக்கும் பொழுது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது. இதனால் குளிர்காலங்களில் நோயாளர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் குளிர் காலத்தில் அதிகமாக மாரடைப்பு வருவதாகவும் அதற்கு என்ன செய்யலாம் என்பதனையும் தொடர்ந்து பார்க்கலாம்.
மாரடைப்பிற்கான காரணம்
இரத்த நாளங்களின் சுவர்களில் உள்ள சிறிய தசைகளால் குறுகுவதனை வாசோகன்ஸ்டிரிக்ஷன் என அழைப்பார்கள். இதன் காரணமாக இரத்த ஓட்டம் குறையும்.
இது போன்ற நேரங்களில் இதய பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அத்துடன் குளிர்காலங்களில் இரத்த நாளங்களின் சுருக்கம் அதிகமாக இருக்கும். இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
Image - indianexpress
தடுக்கும் வழிமுறைகள்
1. எந்த காலநிலையாக இருந்தாலும் நீரேற்றம் அவசியம். இதனால் தண்ணீர் குடிப்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது.
2. மூலிகை தேநீர் மற்றும் சூடான சூப்கள் குடிப்பது சிறந்தது. இது ஆரோக்கியம் கொடுப்பதுடன் உடலை சூடாக வைத்து கொள்கிறது.
3. பழங்கள், காய்கறிகள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவுகளை குளிர்க்காலத்தில் எடுத்து கொள்வது அவசியமாகும்.
4. மீன், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆளிவிதைகளில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பமிலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கின்றது.
5. குளிர்காலத்தின் வசீகரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது உடல் பாகங்கள் ஒரு வகை உட்சாகம் அடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |