குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகம் ஏற்படுமாம்?... தடுப்பது எப்படி?
குளிர் காலத்தில், காய்ச்சல் வந்தால், ஒரு வாரத்திற்குள் மாரடைப்பு ஆபத்து 6 மடங்கு அதிகரிக்கும். ஆகையால், இதய நோயாளிகள் இந்த காலத்தில் தங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
குளிர்காலத்தில் காய்ச்சல் வரும்போது, நமது இதயம் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது. இது மாரடைப்புக்கு வழிவகுக்கிறது என்று ஒரு ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதை நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சுவாச நோய்த்தொற்றுகள், குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்பைக் கண்டறிந்துள்ளது.
அவர்களின் கருத்துப்படி உடலில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால், இரத்தத்தை பம்ப் செய்ய இதயத்தின் தேவை அதிகமாகிறது. எனவே இதயத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
இது தவிர, கடுமையான காய்ச்சலால் உடலில் உருவாகும் குறைந்த ஆக்ஸிஜன் அளவு ஒழுங்கற்ற இதயத் துடிப்பைத் தூண்டும். இரத்த அழுத்தம் குறைவது மயோகார்டியல் இஸ்கெமியாவுக்கு வழிவகுக்கும்.
தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகளான, சத்தான, சூடான உணவை உட்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.