மாரடைப்பு ஒரு பரம்பரை வியாதியா? பலரும் அறியாத பகீர் உண்மை
மாரடைப்பு என்பது தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து வயதினருக்கும் வந்து உயிரைப் பறித்து வருகின்றது.
பரம்பரை வியாதியா மாரடைப்பு?
சர்க்கரை நோயைப் போன்று மாரடைப்பும் வாரிசுகளுக்கு 30 சதவீதம் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது குடும்பத்தில் பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவர்களின் குழந்தைகளுக்கு 30 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் வாழ்க்கை முறையினை சரியாக கட்டமைத்துக் கொண்டால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்றும், ஆரோக்கியமான உணவுகள், சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது கட்டாயம் என்று கூறப்படுகின்றது.
இது மட்டுமின்றி மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதனை தவிர்த்தால் மாரடைப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
அவ்வப்போது பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாதனங்களை பயன்படுத்தி மாரடைப்பு வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டுமாம்.
ஒட்டுமொத்தமாக சிறந்த வாழ்க்கை, ஆரோக்கியமான சூழ்நிலை, சாப்பாடு இவற்றினை தவறாமல் எடுத்துக்கொண்டாலே மாரடைப்பு நோயிலிருந்து நிச்சயம் தப்பித்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |