மனைவியுடன் நடனமாடிய நபர்... ஒரு நொடியில் பிரிந்த உயிர்! திருமண வீட்டில் காத்திருந்த எமன்
திருமண நிகழ்வு ஒன்றில் மனைவியுடன் நடனமாடும் போது நபர் ஒருவர் மாரடைப்பு வந்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி பகுதியை சேர்ந்த மனோஜ் விஸ்வகர்மா என்ற 40 வயது நபர் திருமண விழாவில் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த விழாவில் குறித்த நபர் தனது மனைவியுடன் ஜோடி போட்டு மகிழ்ச்சியாக நடனமாடியுள்ளார்.
திடீர் மாரடைப்பு
அந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்துள்ளார்.
ஒரு நொடியில் பிரிந்த உயிர்
அவரின் உயிரை பறிக்க வந்த எமனாக மாரடைப்பு மாறியுள்ளது. சரிந்து விழுந்த அந்த நிமிடமே மனோஜின் உயிரும் பிரிந்துள்ளது.
மாரடைப்பு என்பது மற்ற நோய்களைப் போல எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென வருவது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் மாரடைப்பும் சில அறிகுறிகளை நம்மிடம் காட்டிவிட்டு தான் வரும்.
அவை என்னென்ன என்பதை அறிந்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இல்லை என்றால் இது போன்ற துயர சம்பவங்கள் நாளை உங்களுகள் குடும்பத்திலும், ஏன் உங்களுக்கும் கூட ஏற்படலாம்.