மாரடைப்புக்கு முன்பு 3 மணி நேரம்: என்ன நடக்கும்? உயிரைக் காப்பாற்ற செய்ய வேண்டியது இதுதான்
'மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்' பிரபல இதயநோய் நிபுணர் மாரடைப்பு குறித்து கூறியுள்ள சில விழிப்புணர்வு கருத்துக்களைக் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை அல்லது கீழே விழுவதைக் கண்டால் உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு 'ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்' என்றெல்லாம் கூறுவார்கள். அவ்வாறு கூறுவதை நாம் லேசாக விட்டுவிட்டு நமது வேலையினை கவனிக்க சென்று விடக்கூடாது.
ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம்.
அதனை S T R அதாவது, SMILE (சிரிக்க சொல்வது), TALK (பேச சொல்வது), RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது)
இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றினையும் அவர்கள் சரியாக செய்யவில்லை என்றால் பிரச்சினை பெரிதாக உள்ளது என்று அர்த்தம்.
உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம். மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த 3 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்... அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம்.
அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் அவருக்கு அட்டாக் வரலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.