மதியம் வடித்த சாதத்தில் இத கலந்து குடிங்க- நாள்ப்பட்ட நோய்கள் குணமாகும்
வழக்கமாக மாலை வேளையில் காபி, டீ குடிப்போம். மாலை வேளைகளில் டீ குடிக்காவிட்டால் சிலரால் அன்றைய நாளை முழுமைப்படுத்த முடியாது.
டீ குடிப்பதற்கு பதிலாக வீட்டில் மதியம் சமைத்த சாதம் 1/2 கப் இருந்தால், அதனுடன் பால் சேர்த்து அருமையான பானம் செய்து குடிக்கலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம்.
மாலை வேளையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இந்த பானத்தை கொடுத்தால் வயிறு நிறைய குடிப்பார்கள்.
அந்த வகையில், குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த பானத்தை எப்படி இலகுவாக தயார் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய்/ நெய் - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/4 கப்
* பால் - 1 1/2 கப்
* சாதம் - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
பானம் தயாரிப்பது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் விட்டு சூடானதும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைய கலந்து விடவும்.
சர்க்கரை கரைந்தவுடன் அடுப்பை குறைத்து விட்டு பொன்னிறமாக மாறும் வரை கரைச்சலை கலந்து கொண்டே இருக்க வேண்டும். அதனுடன்1 1/2 கப் பால் ஊற்றி கலந்து விடவும்.
சர்க்கரை, பால் இரண்டு நன்றாக கலந்து விட்டு அதனுடன் தேவையான அளவு சாதத்தை சேரத்து நன்றாக கொதிக்க விடவும்.
பால், சாதம் இரண்டும் ஓரளவு கெட்டியாக துவங்கும் பொழுது அடுப்பை அணைத்து விட்டு இறக்கினால் சுவையான சாதம் பானம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |