பத்தே நிமிடத்தில் ஹோட்டல் ஸ்டைல் காலிஃப்ளவர் 65! சைவ பிரியர்களே இனி சுடச் சுட ருசிக்கலாம்
பொதுவாக சைவ பிரியர்களுக்கு காலிஃப்ளவர் என்றால் மாமிசத்திற்கு சமமாக பார்க்கப்படுகிறது.
இந்த காய்கறியை பயன்படுத்திச் செய்யப்படும் அனைத்து வகை உணவுகளும் அல்டிமேட் சுவையில் இருக்கும்.
இதன்படி, காலிஃப்ளவரை வைத்து பொரியல், கறி, சிப்ஸ், வருவல் உள்ளிட்ட வகைகளை தயாரிக்க முடியும்.
மேலும் காலிஃப்ளவர் கலந்த உணவுகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விருப்பமாக சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் காலிஃப்ளவர் வைத்து செய்யக்கூடிய சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு காலிஃப்ளவர் 65 எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
சுத்தம் செய்த காலிஃப்ளவர் -1 கப்
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
கான்ஃபிளவர் மாவு – 2 ஸ்பூன்
கடலை மாவு – 1 ஸ்பூன்
காஷ்மீரி சில்லி – 2 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் -1/2 ஸ்பூன்
உப்பு – 1ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
தனியா தூள் -1 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
எண்ணெய் – 250 கிராம்
எப்படி செய்யலாம்
முதலில் அடுப்பை பத்த வைத்து அதில் ஒரு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
கொதித்துக் கொண்டு இருக்கும் போது அரை ஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை தண்ணீரில் போட வேண்டும்.
பின்னர் சுமார் ஒரு 5 நிமிடங்கள் சென்றதும் உள்ளிருக்கும் காலிஃப்ளவரை எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் காலிஃப்ளவரில் இருக்கும் கிருமிகள் அழிவடையும்.
இது ஒரு புறமாக இருக்கையில், ஒரு பவுலில் கான்பிளவர் மாவு, கடலை மாவு, காஷ்மீரி சில்லி தூள், தனியா தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரகம் தூள், மஞ்சள் தூள், உப்பு இவை அனைத்தையும் சேர்த்து பிறகு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பஜ்ஜி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் மாவை கரைத்துக் கொள்ள வேண்டும்.
இதனையடுத்து காலிஃப்ளவரை பொரிக்க தயார் செய்ய வேண்டும். மீண்டும் வேறொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையானளவு எண்ணெய் சேர்த்து நன்றாக சூடாக விட வேண்டும்.
சூடாகியதும், மசாலா கலந்த காலிஃப்ளவரை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த சூப்பரான ஹோட்டல் ஸ்டைல் மொறு மொறு காலிஃப்ளவர் தயார்!