குழந்தைகளை குஷியாக்கும் பூவாழை புட்டு! பண்ணலாமா?
பொதுவாகவே குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக உணவுகளை பழக்கப்படுத்துவது மிகவும் சவாலான விடயம் தான்.
ஆனால் கொஞ்சம் வித்தியாசமான முறையில் முயற்ச்சி செய்தால் குழந்தைகளே கேட்டு வாங்கி சாப்பிடும் நிலையை உருவாக்கிவிடலாம்.'

அப்படி பெரியவர்களை மாத்திரமன்றி குழந்தைகளையும் குஷியாக சாப்பிட வைக்க அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பூவாழை புட்டு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையாக பொருட்கள்
நெய்- 3 தே.கரண்டி
ரவை- ஒரு கப்
பூ வாழைப்பழம் - 2 அல்லது 3
நாட்டு சர்க்கரை - 3/4 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருகியதும் ஒரு கப் ரவை சேர்த்து நன்றாக வறுத்தி இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து பூவாழை பழத்தை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்திருந்த ரவையுடன் மசித்த வாழைப்பழத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனையடுத்து, அதனுடன் நாட்டு சர்க்கரை, துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் வாழை இலையை சிறிய துண்டுகளாக வெட்டி பிரைந்த மாவை சிறிதளவு எடுத்து வாழையிலையில் வடை போல் தட்டி இலையை மடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 5 தொடக்கம் 7 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் அசத்தல் சுவையில் பூவாழை புட்டு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |