Oats Kara Paniyaram: ஆரோக்கியமான ஓட்ஸ் கார பணியாரம்... வீட்டில் செய்வது எப்படி?
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஓட்ஸ் கொண்டு எவ்வாறு சுவையான கார பணியாரம் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பணியாரம் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
அதிலும் இன்னும் ஆரோக்கியமான வகையில் ஓட்ஸ் கொண்டு பணியாரம் செய்யலாம். இன்றைய காலத்தில் ஓட்ஸ் ஆரோக்கிய உணவாக இருக்கின்றது.
வயது முதிர்ந்த பெரும்பாலான நபர்கள் ஓட்ஸை தான் காலை உணவாக சாப்பிடுகின்றனர். இந்நிலையில் ஓட்ஸ் கொண்டு ஆரோக்கியமான முறையில் பணியாரம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
Instant Oats - 1 கப்
அரிசி மாவு - ¼ கப்
கெட்டி தயிர் - ½ கப்
பெரிய வெங்காயம் - 1
கேரட் - 1
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
கடுகு - ½ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
பெருங்காய தூள் - ¼ டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் ஓட்ஸ் போட்டு மிதமான தீயில் 4-5 நிமிடங்களுக்கு நிறம் மாறாமல் நறுமணம் வரும் வரை வறுத்து எடுத்து நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு கரடுமுரடான பொடியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும்.
பின்னர் அதில் சலித்த அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கெட்டியான புதிய தயிரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு தயாரிக்கவும்.
பின்னர் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் சீரகம் போட்டு கடுகு வெடித்ததும் பெருங்காய தூள் மற்றும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் துருவிய கேரட்டை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
வெங்காயம் மற்றும் கேரட் மென்மையாக வதங்கியவுடன் அவற்றை அப்படியே தயார் செய்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலந்துவிட்டுக் பின்பு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை போட்டு நன்றாக கலக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |