அதிக எண்ணெய் இல்லாமல் சூப்பரான கேரட் சிப்ஸ் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..?
ஆரோக்கியமான சமயல் நோயில்லாத வாழ்க்கைக்கு உதவி புரியும். நமக்கு பிடித்த சில உணவுகளுக்கு எண்ணை அதிகம் பயன்படுத்தி சமைப்பது வழக்கம்.
இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இன்று நாம் குறைந்த எண்ணையில் எப்படி ஆரோக்கியமான மற்றும் சுவையான கேரட் சிப்ஸ் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கேரட் - 2
- சில்லி ஃபிளேக்ஸ் - 1
- ஸ்பூன் மிளகு - 1/4 ஸ்பூன்
- வெஜிடெபிள் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
- ஓரிகனோ - 1 ஸ்பூன்
- சாட் மசாலா - 1/2 ஸ்பூன்
- பூண்டு பொடி - 1 ஸ்பூன்
- உப்பு - தே.அ
செய்முறை
முதலில் கேரட்டை நன்கு கழுவி அதன் தோலை சீவிக்கொள்ளுங்கள். பின் அவற்றை மெல்லிய ஸ்ட்ரிப் போல் நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள்.
ஈரப்பதம் இருக்கக் கூடாது. அதில் ஓரிகனோ, சாட் மசாலா, சில்லி ஃபிளேக்ஸ், மிளகு , பூண்டு பொடி உப்பு , 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு குளுக்கி கலக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது அவற்றை பேக்கிங் டிரேயில் அடுக்கி வைத்து 180 டிகிரியில் 15-20 நிமிடங்கள் நேரம் வைத்து பேக் செய்யுங்கள்.
பின் அவற்றை எடுத்து மயோனைஸ், சாஸ் அல்லது புதினா சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.