சூப்பரான சிவப்பு அவல் லட்டு - ரொம்ப ஈஸியா எப்படி செய்யலாம்ன்னு பார்ப்போம்!
சிவப்பு அவல் நன்மை
சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இது தயாரிக்கப்படுவதுதான். சிவப்பு அவல் சாப்பிடுவதால் பசியைப் போக்கிவிடும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து விடும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவி செய்யும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கைக்கு உதவி செய்யும். மூளைச் செல்களைப் புத்துணர்ச்சியாக்க வைத்துக் கொள்ள உதவும். புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களைக் குடலுக்குள் செல்லவிடாமல் தடுத்து விடும்.
சிவப்பு அவல் லட்டு எப்படி செய்யலாம்ன்னு பார்ப்போம் -
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் - 1 கப்
வெல்லம் ஒரு - 1 கப்
தேங்காய் - 1 கப்
முந்திரி - 10
நெய் - 3 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரை வைத்து அது சூடானதும் முதலில் சிவப்பு அவலை போட்டு நன்றாக 2 நிமிடம் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் சிறிதளவு நெய் ஊற்றி அதில் முந்திரை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் துருவிய தேங்காயை போட்டு 2 நிமிடம் வதக்கி பொன்னிறமானதும் எடுத்துக் கொள்ளுங்கள்.
வறுத்தெடுத்த அவலை ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த அவலில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடுங்கள்.
பின்னர், வாணலில் வெல்லம் போட்டு அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். இந்த பாகு கம்பி பதம் வந்தபிறகு நெய், தேங்காய் துருவல், அரைத்து ஊறவைத்த அவல், முந்திரி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு 10 நிமிடம் கழித்து உருண்டை, உருண்டையாக அவல் லட்டு பிடிக்க வேண்டும்.
சூப்பரான, சுவையான அவல் லட்டு ரெடியாகிவிடும்.