நாக்கு ஊறும் சுவையான அப்பளக் குழம்பு செய்வது எப்படி?
பலருக்கும் பொரித்த அப்பளம் சாப்பிடுவதில் அலாதி பிரியம். அதிலும் தங்களுக்கு பிடித்த உணவில் அப்பளத்தை தொட்டு சாப்பிட பலரும் விரும்புவார்கள்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அப்பளமும் அளவுக்கு மிஞ்சினால் தீமையை மட்டுமே நம் உடலுக்கு ஏற்படுத்தும்.
அப்பளம் இருந்தால் போதும் சூப்பரான குழம்பை நீங்கள் செய்யலாம். இந்த குழம்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னும் வேண்டும் என கேட்கும் வகையில் சுவையோடு இருக்கும். ருசியான அப்பளக் குழம்பு செய்வது எப்படி என்பது குறித்து இங்கு நாம் அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பொரித்த அப்பளம் - 20
தக்காளி - 4
வெங்காயம் - 4
பட்டை - 2
கிராம் - 4
ஏலக்காய் - 2
இஞ்சி, பூண்டு - 2 ஸ்பூன்
வீட்டு மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தேங்காய் - 2
பெருங்காயம் - 2 சிட்டிகை
கடுகு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் கடுகு போட வேண்டும்.
பின்னர், நறுக்கிய வெங்காயத்தை போட வேண்டும். வெங்காயம் வதங்கிக்கொண்டிருக்கும்போதே பட்டை, கிராம், ஏலக்காய் போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு, இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்க வேண்டும்.
இதன் பின்னர், தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் தூள், வீட்டு மிளகாய்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
எண்ணெய் சுருண்டு மேலே வரும்போது, அப்பளத்தை அதில் போட்டு 2 நிமிடத்தில் பாத்திரத்தை கீழே இறக்கி விட வேண்டும். சுவையான அப்பளம் குழம்பு ரெடி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |