வீட்டில் ரவையும் தேங்காயும் இருக்கா? அப்போ காலை உணவு இப்படி செய்திடுங்கள்
வீட்டில் அனைவரும் சுவையாக காலை உணவு செய்வது வழக்கம். இந்த உணவுகளில் அதிகமாக வீட்டில் செய்யப்படுவது இட்லி தோசை தான்.
ஆனால் இந்த பதிவில் ரவா மற்றும் தேங்காய் வைத்து சுவையான சத்தான காலை உணவு ஒன்று செய்து பார்கலாம்.
இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் செய்யப்போகும் இந்த காலை உணவிற்கு பெயர் ரவா தேங்காய் தோசை ஆகும்.
தேவையான பொருட்கள்
- ரவை - 1 கப்
- துருவிய தேங்காய் - 3/4 கப்
- சின்ன வெங்காயம் - 5
- சீரகம் - 1 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - 1 கப்
- துருவிய கேரட் - சிறிது
- எண்ணெய் - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் ஒரு மிக்ஸியில் ரவை, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்து தோசை ஊற்றும் பருவத்திற்கு நீர் ஊற்றி எடுத்துக்கொள்ளவும்.
இதை 10 நிமிடம் மூடி ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் தோசை மாவை ஊற்றி அதில் துருவிய கேரட்டை தூவி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், ரவா தேங்காய் தோசை தயார்.
இதனுடன் சாம்பார் குருமா சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிடலாம் இது சுவையாகவும் இருக்கும் ஆரோக்கியம் வாய்ந்தது கூட.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |