சக்கரை நோயாளிகளுக்கான பானம்... வீட்டிலேயே தயாரிக்கலாம்
இரசாயன உணவை எடுத்து கொள்ளாமல் ஆரோக்கியமான உணவை எடுத்துகொண்டாலே நோய்கள் எம்மை அண்டாது.
ஆரோக்கியமான உணவுகள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதற்காக நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் சக்கரை நோய் பரவலாக காணப்படுகிறது, உடலில் சர்க்கரையின் அளவை குறைக்கும் பானம் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கொய்யாப்பழம் - 100 கிராம்
- சீரக தூள் - கால் தேக்கரண்டி
- மிளகுத் தூள் - 3 சிட்டிகை
- ஏலக்காய் தூள் - 3 சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் கொய்யாப்பழத்தை எடுத்து நன்கு கழுவ வேண்டும். பின்னர் கொய்யாப்பழத்தை துருவிக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் ஊற்றி மத்து ஒன்றினால் நன்கு கடைந்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் மிளகத்தூள், சீரகத்தூள், ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை வேறு சுவை சேர்க்க வேண்டுமானால் சேர்த்து அருந்தவும்.
இந்த பானத்தை காலை மற்றும் மாலை நேரங்களில் அருந்தி வரவும். இந்த இயற்கையான பானத்தை குடித்து வந்தால் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்.
மற்றும் மலச்சிக்கல் இருந்தால் அது இல்லாமல் போகும். இந்த பானத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண்பார்வை பிரச்சனைக்கு நிவாரணியாக இருக்கும். இதை சிறியவர் முதல் பெரியவர் வரை யாராக இருந்தாலும் குடித்து வரலாம்.