பிரியாணி சுவையை மிஞ்சும் தேங்காய் பால் சாதம் இதை சேர்த்து செய்ங்க
வீட்டில் சாதம் செய்வது பொதுவான உணவாகும். இதை அவசரமாக பல வகையில் செய்வார்கள். குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் நாம் உணவு செய்வதற்கு பெரிதும் யோசிக்க வேண்டும்.
வீட்டில் குழந்தைகள் சுவையாக இருந்தால் மட்டுமே சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கு உணவு செய்தால் அதில் ஆரோக்கியம் நிறைந்திருக்க வேண்டும்.
இதற்கு ஏற்ற ஒர உணவு தான் தேங்காய் பால் சாதம். இதில் உடலுக்கு தேவையான நன்மைகள் நிறைந்திருப்பதுடன் சுவையும் பிரமாதமாக இருக்கும். இந்த பதிவில் சுவையான தேங்காய் பால் சாதம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி 1 1/2 கப்
- தேங்காய் பால் 3 கப்
- பெரிய வெங்காயம் 1
- தக்காளி 1
- பிரிஞ்சி இலை 2
- இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன்
- பட்டை சிறு துண்டு
- கிராம்பு 4
- ஏலக்காய் 1
- அன்னாசி பூ 1
- ப.மிளகாய் 2
- சீரகம் 3/4 டீ ஸ்பூன்
- சோம்பு 1/2 டீ ஸ்பூன்
- உடைத்த முந்திரி 12
- கல் உப்பு
- எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
- நெய் 1 டேபிள் ஸ்பூன்
- முந்திரி, தேங்காய் துண்டுகள், 1 ப.மிளகாய்
செய்யும் துறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில், தேங்காய் துண்டுகள், சிறிது தண்ணீர் விட்டு முதலில் அரைக்கவும்.
திரும்பவும் தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி தண்ணீர் விட்டு ஊற வைத்து, பிறகு வடித்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய், எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி, இஞ்சி பூண்டு விழுது, கீறின ப.மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து தேங்காய் பாலை விட்டு மூடி போட்டு மூடவும். பின்னர் இப்போது குக்கரில் 1 விசில் விட்டு இறக்கவும். 1 ஸ்பூன் நெய் விட்டு சாதம் உடையாமல் கிளறவும். பின்னர் இறக்கி வேறு பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும்.
கடைசியாக சாதத்தின் மேலே முந்திரி, தேங்காய் துண்டுகள், 1 ப.மிளகாய் வைத்து அலங்கரிக்கவும். இப்போது, சுவையான, சுலபமான,தேங்காய் பால் சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |