மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் உளுந்து சட்னி ... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
தென் இந்திய உணவுகளில் குறிப்பாக நம்ம ஊர் தோசை, இட்லி, மெது வடை போன்ற உணவுகளின் முக்கிய மூலப்பொருள் உளுந்து தான்.
உளுந்து ஏராளமான கனிமங்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
இந்த நார்ச்சத்துக்கள் நீங்கள் உண்ணும் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்ச உதவுகின்றன.
அதுமட்டுமன்றி இதில் உள்ள நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாகாப்பதுடன் கோடைகாலத்தில் உடல் வெப்பநிலையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்த உளுந்தை பயன்படுத்தி இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான உளுந்து சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைக்க தேவையான பெருட்கள்
வெள்ளை உளுந்து - 1/2 கப்
துருவிய தேங்காய் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
புளி - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெள்ளை உளுந்தை போட்டு பொன்நிறமாக மாறும் வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வரமிளகாய், துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக தாளித்துக்கொள்ள வேண்டும்
பின்னர் இந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்து கலந்தால் சுவையான உளுந்து சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |