சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம்...இனிமேல் தவிர்க்காதீர்கள்
காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சொன்னால் மிகையாகாது.
கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.
மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
சுண்டைக்காய் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நச்சுக்கிருமிகள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமடைகிறது.
ரத்தத்தை சுத்திகரிக்கிறது. உடல் உறுப்புகளில் எலும்புகளை பலப்படுத்தும் அளவுக்கு நிறைவான கால்சியம் சுண்டைக்காயில் காணப்படுகின்றது.
சுண்டைக்காயின் நன்மைகள்
சுண்டைக்காய் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. பசியின்மை பிரச்சினை மற்றும் செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கு சுண்டைக்காய் சிறந்த தீர்வு கொடுக்கின்றது.
சுண்டைக்காயில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால் எலும்புகளை உறுதியாகவும் வலுவாகவும் வைத்திருப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.
நாள்பட்ட சளியை போக்க உதவும் சுண்டைக்காயில் நெஞ்சு சளியை எடுக்கும் ஆற்றலும் நிறைந்து காணப்படுகின்றது.
வாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை குழம்பு செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் ,உடல் உஷ்ணம் போன்ற பிரச்சினைகள் விரைவில் குணமாகும்.
மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு சுண்டைக்காய் வரபிரசாதம் என்றே கூற வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |