மாஇஞ்சியை சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா? தமிழர்களின் மருத்துவத்தில் மறைந்துள்ள ரகசியம்
health
food
By Nivetha
மாங்காய் இஞ்சியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.
புற்றுநோய் கட்டிகளை தடுப்பதில் இருந்து, பாலியல் புணர்ச்சியை தூண்டுவது வரை இது ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கிறது.
இந்த இஞ்சியை உணவில் சேர்த்துக் கொண்டால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என பார்ப்போம்.
- மாங்காய் இஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள் மாங்காய் இஞ்சியில் குர்குமின், டெமெத்தாக்ஸி குர்குமின் மற்றும் டெஸ்-மெத்தாக்ஸி குர்குமின் போன்ற மஞ்சளில் உள்ளது போன்ற குர்குமினாய்டுகள் உள்ளன.
- இந்த குர்குமின் பசியைத் தூண்ட உதவுகிறது. எனவே இதை சமையலில் சேர்த்து வந்தால் நல்ல பசி உணர்வை பெறுவீர்கள். மாங்காய் இஞ்சியில் ஆன்டிடிரஸன் பண்புகள் காணப்படுகிறது.
- இதில் மனதை அமைதிப்படுத்தும் பண்புகள் இதில் காணப்படுகிறது. கார்மினேட்டிவ் பண்புகள் இதில் காணப்படுகிறது.
- இது நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்துகிறது, கவலை, மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்ற மனச்சோர்வு அறிகுறிகளில் இருந்து விடுபட உதவுகிறது.
- இந்த மசாலாவின் வாசனை மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. மாங்காய் இஞ்சியில் புற்றுநோய் எதிர்ப்பு தன்மை உள்ளது.
- மரபணு செயல்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை தடுக்கிறது. கீமோதொரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுடன் சேர்ந்து இதை பயன்படுத்தி வரலாம்.
- மாங்காய் இஞ்சியில் ஆக்ஸினேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது மாங்காய் இஞ்சியில் ப்ளோவனாய்டுகள் உள்ளன.
- இதில் ஆன்டி பைரியடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. உடம்பில் உள்ள அதிகப்படியான சூட்டை குறைக்க உதவுகிறது. காய்ச்சலை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராட உதவுகிறது மாங்காய் இஞ்சி பாலியல் ஆசைகளைத் தூண்ட உதவுகிறது.
- பாலியல் செயல்திறனை மேம்படுத்துகிறது. பாலியல் இன்பங்களை அதிகரிக்கிறது. மாங்காய் இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. அவை உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கப் பயன்படுகிறது.
- இது பாலியல் ஆசையைத் தூண்ட உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்கள் விந்து இனப்பெருக்க உறுப்புக்கு சேதம் விளைவிக்காமல் காக்க உதவுகிறது.
- நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற வளர்ச்சிதை மாற்ற கோளாறுகளுக்கு உடல் பருமன் மிக முக்கியமான காரணம் ஆகும். மாங்காய் இஞ்சியில் குர்குமின், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.
- இது உடல் பருமனுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இதிலுள்ள குர்குமின் அடிபோசைட்டுகள் தசை செல்கள், மேக்ரோபேஜ்கள் மற்றும் கணைய உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டு உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சி காரணிகளை ஒடுக்க உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது.
-
பித்த தோஷத்தில் சமநிலையின்மை ஏற்படுவதால் சரும பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது. மாங்காய் இஞ்சியில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் குளிர்ச்சியான தன்மை அழற்சி, எரிச்சல், சரும வடுக்கள் போன்றவற்றை போக்க உதவுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US