உடல் எடையை குறைக்க வேண்டுமா...! காலையில் குடிக்க சிறந்த பானம்!
பெரும்பாலானோருக்கு இப்போதுள்ள பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு தான். ஒரு சிலர் உடல் எடையை குறைக்க என்னென்னவோ செய்வார்கள் ஆனால், உடல் எடை குறைந்து இருக்காது.
உடல் எடையை குறைக்க ஒவ்வொருவரும் பலவித வழிகளை பின்பற்றி வருவார்கள். சிலருக்கு உடல் எடையை குறைக்க நேரம் இல்லாமல் இருக்கும்.
ஒரு சிலருக்கு காலையில் டீ. அல்லது கோப்பி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஒரு சிலர் அதற்கு அடிமையாக இருப்பார்கள். நீங்கள் காலையில் டீ அல்லது காப்பி குடிப்பதற்கு பதிலாக இந்த பானத்தைக் குடித்துப்பாருங்கள் உங்கள் உடல் எடை சர சரவென குறையும்.
என்ன குடிக்கலாம்?
எலுமிச்சை தண்ணீர்: வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் உடலுக்கு நல்லது. அதுவும் சுடுநீருடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும்.
சீரகத்தண்ணீர்: தினமும் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, குடிக்க வேண்டும். இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதை உணரலாம்.
அப்பிள்: சுடுநீரில் அப்பிள் மற்றும் பட்டை கலந்து அதனுடன் அப்பிள் விநிகர் கலந்து குடிக்கலாம். தேவையென்றால் சிறிது தேன் கலந்தும் குடிக்கலாம்.
தினமும் காலையில் இதில் ஏதாவது ஒன்றை குடித்து சிறிது நேரம் கழித்து இளம்வெயிலில் 30 நிமிடம் நடக்கலாம் அல்லது தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.