வெள்ளி நாணயங்களை பாலில் இட்டு வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஆய்வாளர்களையும் வியக்க வைத்த தமிழன்
நாம் வெள்ளித் தட்டில் சாப்பிடுவதால் ஏராளமான பெறலாம். இது குறித்து முழுமையாக பார்க்கலாம்.
வெள்ளிப் பாத்திரங்கள் உணவிலுள்ள கிருமிகளை அழிக்கிறது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உணவு விரைவாக செரிமானம் அடைவதற்கு உதவி செய்கிறது.
நமது உடலுக்குள் செல்லும் உணவை எரிக்கும் சக்தியையும் அதிகரிக்கிறது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உடலில் உள்ள நிலையற்ற அணுக்களுடன் போரிட்டு நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்வைத் தருகிறது.
அதோடு பாதிப்படைந்த உடல் செல்களையும் மீண்டும் தூண்டி எழுப்பி நன்றாக இயங்க வைக்கிறது.
நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, ஆபத்தான நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது. உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளிக்கு உண்டு.
வெள்ளித் தட்டில் சாப்பிடும் போது அது தீய பாக்டீரியாக்களிடமிருந்து நம்மை பாதுகாப்பதோடு, நமது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது. மேலும் பலவிதமான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான பலவிதமான ஊட்டச் சத்துக்களையும் வழங்குகின்றது.
வெள்ளிப் பாத்திரங்களில் ஏன் உணவைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்?
- உணவில் உள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை வெள்ளி அழிக்கக் கூடியவை.
- பழைய காலத்தில் நம் தமிழ் மூதாதையர்கள் பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் வெள்ளி நாணயங்களை பாலில் இட்டு வைப்பார்கள்.
-
மேலும் தண்ணீர் மற்றும் ஒயின் போன்றவை நீண்ட நேரம் கெடாமல் இருக்கவும் அதே நேரம் அவை சுவையாக இருக்கவும் அவற்றை வெள்ளிப் பாத்திரங்களில் மக்கள் ஊற்றி வைத்திருக்கின்றனர்.