கண்களில் எரிச்சல், அரிப்பை ஏற்படுத்தும் உயிரினம் பற்றி தெரியுமா?
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் முகம் என்பது முக்கியமானதொன்றாகும்.
முகத்தில் சிறு சிறு எட்டு கால் உண்ணிகள் நகர்ந்து கொண்டிருக்கலாம்.
அப்படி உங்களுடைய கண்ணிமைகளில் நகர்ந்து கொண்டிருக்கும் உயிரினத்தை தோல் பேன்கள் என அழைக்கிறார்கள். இந்த உயிரினத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது.
சில சமயங்களில் கண்களில் அளவுக்கு அதிகமாக அரிப்பு, எரிச்சல் அல்லது வெள்ளை நிற திட்டுகள் போன்று காணப்பட்டால் இந்த உண்ணிகள் உங்களுடைய இமைகளில் நகர்ந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், கண்களை சேதப்படுத்தும் தோல் பேன்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தோல் பேன்கள் இருப்பது உண்மையா?
சிறிய தோல் பேன்கள் என்பது முகத்தில் உள்ள மயிர் இழைகளில் வாழக்கூடிய உயிரினமாகும். அதிலும் குறிப்பாக இந்த உயிரினம் கண்கள், மூக்கு மற்றும் புருவங்களில் இருக்கும். இரண்டு வகையில் பிரிக்கக் கூடிய இந்த உயிரினம் இமைகளிலும் வாழவே அதிகமாக விரும்புகின்றன.
60 வயதை அடையும்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் முகத்தில் இந்த தோல் பேன்கள் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஏன் அரிப்பை ஏற்படுகிறது?
பெரும்பாலான நேரங்களில் இந்த உண்ணிகள் தீங்கற்றதாக இருந்தாலும் அவை இருப்பதும் நமக்கு தெரியாது. மாறாக மழைக்காலங்களில் விரைவாக பெருகி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அளவுக்கு அதிகமாக வளர்ச்சி அடையும் போது, அவை கண்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அறிகுறிகள்
*தொடர்ச்சியாக கண்களில் அரிப்பு ஏற்படும்.
*கண்கள் சிவந்து காணப்படும்.
*கண்களில் வீக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
*கண் இமைகளில் திட்டுகள் விழும்.
*கண் இமைகள் உதிர்வு ஏற்படும்.
*கண்களில் நீர் வடியும்.
*மங்கலான பார்வை இருக்கும்.
*கண்களில் எரிச்சல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.
காரணம்
ஒரு தோலில் இருந்து மற்றொரு தோலுக்கு மாற்றப்படுகிறது. நீங்கள் பயன்படுத்தும் துண்டு, தலையணை அல்லது மேக்கப் பொருட்களில் இருந்து பரவும். தோல் பேன்கள் அளவுக்கு அதிகமாக வளர்ச்சி அடையும் பொழுது பார்வையில் கூட தாக்கம் செலுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |