எப்போதும் நடைப்பயிற்சி செய்கிறீர்களா? இந்த பிரச்சனைகள் வரும் எச்சரிக்கையாக இருங்கள்
சுறுசுறுப்பாக இருப்பதற்கும், உங்கள் மனதைத் தெளிவுபடுத்துவதற்கும் நடைபயிற்சி மிகவும் எளிமையான மற்றும் பயனுள்ள வழியாகும். இது பூங்காவில் நிதானமாக உலாவுவது அல்லது வீதிகளில் நடப்பது செய்யலாம்.
இதனால் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்க விறுவிறுப்பான நடைப்பயிற்சி எதுவாக இருந்தாலும் அதில் பல நன்மைகள் உள்ளன. இதை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வழக்கப்டுத்துவதன் மூலம் சில ஆரோக்கிய நன்மைகளை பெறுவான்.
ஆனால் இதனால் பிரச்சனைகளும் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் அரை மணி நேரம் நடக்க வேண்டும். இத ஒரு வயதிற்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த பாதிப்பு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நடைப்பயிற்ச்சி
நடப்பதால் சில பொதுவான பிரச்சனைகள் வரும். அதிகமான நடைபயிற்சியால் செய்வதால் பொதுவாக உடல்நலப் பிரச்சனைகள் வரலாம். இதில் கீழ் முதுகு வலி வரும் இது மோசமான தோரணை அல்லது பலவீனமான மைய தசைகள் இருந்தால் இந்த பிரச்சனை அதிகமாகும்.
அதிகமாக நடைபயிற்சி செய்வது அல்லது நீண்ட தூரம் செல்வது முதுகெலும்பு மற்றும் கீழ் முதுகு தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த வலியின் காரணமாக நீண்ட நேரம் நடப்பது அல்லது நிற்பது கூட சங்கடமாக மாறும்.
இது மந்தமான வலி முதல் கடுமையான வேதனை வரை ஏற்படுத்தும். அதிகமாக நடைப்பயிச்சி செய்யும் காலத்தில் குதிகால், வளைவுகள் மற்றும் கால்விரல்கள், அதிகப்படியான வலி காணப்படதல் நடைபயிற்சிக்கான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகும்.
இதன் காரணமாக குதிகால் எலும்பை உங்கள் கால்விரல்களுடன் இணைக்கும் தசைநார் வீக்கமடையும் ஒரு நிலை இந்த வலிக்கு காரணமாக இருக்கலாம்.இது தவிர பொருத்தமற்ற காலணிகளை அணிந்த நீண்ட தூரம் நடக்கும்போது இந்த பிரச்சனை ஏற்படும்.
மூட்டு வலி பொதுவாக உடற்பயிற்சிக்குப் பிறகு 24 முதல் 48 மணிநேரங்களுக்கு நடைப்பயிற்ச்சியின் பின் வலிக்கும். இது கடுமையான வலியை ஏற்படுத்தும். பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கமானது திசுக்களில் திரவம் குவிவது இந்த வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இது அதிக நேரம் நடப்பதால் ஏற்படுகிறது.
நடைபயிற்சி தூரம் அல்லது தீவிரத்தை திடீரென அதிகரிக்கும் நபர்களுக்கு இந்த நோய் வருவது சாதாரணம். இது தசைகள், தசைநாண்கள் மற்றும் தாடை எலும்பைச் சுற்றியுள்ள எலும்பு திசுக்களின் வீக்கத்தால் ஏற்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |