AI-யிடம் ஆரோக்கியம் பற்றி கேட்கும் மக்கள்! எச்சரிக்கும் மருத்துவர்கள் காரணம் என்ன?
ஜெனரேட்டிவ் AI டூல்ஸ்களின் உதவியுடன் மக்கள் தங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கான தகல்வல்களை இதில் தேடுகின்றனர். இது பற்றி வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜெனரேட்டிவ் AI
தற்போது வளர்ந்துவரும் தொழிநுட்பம் காரணமாக மக்கள் தங்களின் சிறிய பிரச்சனைகளுக்கும் இணையத்தை நாடுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறி வருகிறது ChatGPT என்பது மிகவும் நன்கு அறியப்பட்ட மற்றும் பரவலாகக் கிடைக்கும் AI டூல்ஸ்களில் ஒன்றாகும்.
இதில் நாம் எந்த கேள்வி கேட்டாலும் அது நமக்கு துல்லியமான பதிலைக்கொடுக்கும். இதில் பல வகைக் கேள்வி கேட்டாலும் அதற்கான பதில் விரைவில் கிடைக்கும்.
ஈனால் இந்த பதில்கள் எப்போதும் சரியாக இருக்காது. வேறு எதில் இது விளையாட்டான விஷயமாக இருந்தாலும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இது பொருத்தமற்றதாகும்.
உடல்நலம் தொடர்பான கேள்விகளுக்கு ChatGPTயை மட்டுமே நம்புவது ஆபத்தானது. நமது உடலில் இருக்கும் சில பிரச்சனைகளை கொண்டு நாம் ChatGPT யிடம் கேள்வி எழுப்பினால் அது எது பொதுவானதோ அதை மட்டுமே நமக்கு காட்டி கொடுக்கும்.
இதை நாம் பயன்படுத்தும் போது உடலில் அது வேறு பிரச்சனைகளை கொண்டு வரும்.
இதன்படி Chat GPT இன் சுகாதார ஆலோசனைகளை பெறுவது, பெரும்பாலும் சுகாதார நிலைமைகள் பற்றி மிகக் குறைந்த அறிவு உள்ளவர்கள் அல்லது ஆங்கிலம் நன்றாகத் தெரியாதவர்களால் கேட்கப்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.
எனவே நாம் கடுமையான உடல் நலம் பற்றி Chat GPT யிடம் கேட்டால் அதை ஒரு குறிப்பாக தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அதை ஆலோசனையாக எடுக்க கூடாது என உலக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இப்படி Chat GPT யை பயன்படுத்துவதால் அது நமது உடலில் பல ஆபத்தான விளைவுகளை கொண்டு வர கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |