சியா விதைகளை வைத்து எப்படி எடையை குறைப்பது? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நம்மை தாக்குகின்றது நோய்களுக்கு மருந்து வெளியில் எங்கும் இல்லை.
மாறாக வீடுகளில் இருக்கும் தானியங்கள்,காய்கறிகளை வைத்து சரிச் செய்யலாம்.
அந்த வகையில், “சூப்பர்ஃபுட் ” என்ற அழைக்கப்படும் சியா விதைகள் பல விதமான நன்மைகளை கொண்டுள்ளது.
அத்துடன் சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், வயிற்றை நீண்ட நேரம் நிரப்ப உதவுவது மட்டுமல்லாமல் அடிக்கடி ஏற்படும் தேவையற்ற பசியையும் கட்டுப்படுத்துகிறது.
இதனால் இலகுவாக எடையை குறைக்கலாம் எனவும் கூறுகின்றார்கள். சியா விதைகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றது என நாம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் எப்படி சாப்பிட்டால் எடை குறையும் என்பதனை தெரிந்து கொள்வோம்.
சியாவிதைகளை எடுத்து கொள்ளும் போது ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டிக்கு மேல் உட்கொள்ளக் கூடாது. அத்துடன் சியாவிதைகள் எடுத்து கொள்ளும் போது அளவிற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும்.
சியா விதைகளை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. சியா விதைகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கின்றது. இதனால் சியா விதைகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது தசைகள் வலுப்பெறும்.
2. சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்ததனால் அவை செரிமானத்திற்கு நல்லது.
3. சியா விதைகளில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் அல்லது ALA ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாகவுள்ளது. இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
சியா விதைகளை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?
- ஸ்மூத்தீஸ்
- ஓட்ஸ்
- சாலட்
- சாலட் டிரஸ்ஸிங்
- தயிர் சூப் அல்லது கிரேவிக்களில் மஃபின்கள்
- வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டி வகைகள்
- ஆம்லெட்
- சியா புட்டிங்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |