உடலுக்கு அனைத்து சத்தும் கிடைக்கணுமா? அப்போ முருங்கை கீரை சாதம் செய்து சாப்பிடுங்க
நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஆரோக்கியம் தருவனவாகவும் சத்து நிறைந்ததாகவும் இருப்பது அவசியமாகும்.
எவ்வளவு உணவுகள் சுவைக்க இருந்தாலும் கீரையை வைத்து இன்றைய பதிவில் முருங்கை கீரை சாதம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி - ஒரு கப்
- துவரம் பருப்பு - கால் கப்
- முருங்கை கீரை - அரை கப்
- பெரிய வெங்காயம் - 1
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 2 டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 2 டீ ஸ்பூன்
- பொட்டுக் கடலை - 2 டீ ஸ்பூன்
- பச்சரிசி - 2 டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4
- கொப்பரைத் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- கடுகு- அரை டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ஒரு டீ ஸ்பூன்
- பூண்டு - 3 பற்கள்
- எண்ணெய் - 1 டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 1
செய்யும் முறை
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக சேர்த்து கழுவி வைக்க வேண்டும். இதன் பின்னர் மூன்றே முக்கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டையும் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும்.
இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கழித்து இறக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து, அதனை பொடியாக்கி கொள்ளுங்கள். எண்ணெய் காய வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, முருங்கை கீரை, காய்ந்த மிளகாய் போட்டு தாளியுங்கள்.
இதன் பின்னர் பிறகு பூண்டு சேர்த்து வறுத்து, வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றை சாப்பாட்டுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியையும், நெய்யையும் சேர்த்து ஒன்றாக கலந்து விடுங்கள். இப்போது சுவையான முருங்கை கீரை சாதம் தயார். இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என எல்லோரும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |